மக்கா மஸ்ஜித் ஷரீஅத் கவுன்சில் அஸ்ஸலாமு அலைக்கும்,அல்லாஹ்வினுடைய தீனுல் இஸ்லாம் உலக வாழ்கையில் மனிதன் சந்திக்கக்கூடிய எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வை சொல்லியிருக்கின்றது. அது தனி மனிதருகளுக்கிடையே ஏற்படும் பிரச்சனையாக இருந்தாலும், சமுதாய கூட்டு வாழ்கையில் உண்டாகும் பிரச்சனையாக இருந்தாலும் எந்த ஒன்றிற்கும் தீர்வு சொல்லாமல் இல்லை. ஆனால் இன்று முஸ்லிம்கள் அல்லாஹ் சொல்லக்கூடிய தீர்வை பற்றி அறிந்துகொள்ளாமல் தங்களுடைய சின்ன சின்ன பிரச்சனைகளுக்கும் வழக்கு, நீதிமன்றம் என்று அலைவதினால் தங்களுடைய பணம், நேரம், அமல்கள், மானம், நிம்மதி போன்ற அனைத்தையும் விரயமாக்கிக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இருந்து முஸ்லிம் சமுதாயத்தை பாதுகாத்து அல்லாஹ் சொல்லக்கூடிய தீர்வை தங்களுடைய வாழ்கை நெறியாக ஏற்று செயல் பட வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் ஆரம்பிக்கப்பட்டதுதான் மக்கா மஸ்ஜித் ஷரீஅத் கவுன்சில்.